Ads (728x90)

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய குற்றவியல் பணியகத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் கண்டி பகுதியைச் சேர்ந்த, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை பிரிவின் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆவார். 

இவர் இதற்கு முன்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதுக்குழுப் பிரிவின் பிரதிப் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்தக் குற்றத்தைச் செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றவியல் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget