Ads (728x90)

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

இவர்களில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கடந்த 20 மாத காலப்பகுதியில் சிவப்பு அறிவித்தல்கள் மூலம் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், சிவப்பு அறிவித்தல் இல்லாமலேயே மேலும் 35 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இவர்களுக்கு மேலதிகமாக, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள மேலும் 96 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாகவும், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, மலேசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா, ரஷ்யா, இத்தாலி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களை விரைவில் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget