இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில், நீரியல் வளர்ப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கையின் கடல் உணவு பெறுமதி சங்கிலியை மேம்படுத்துதல் மற்றும் ஜப்பானிடமிருந்து தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஜப்பானிய சந்தையில் இலங்கையின் கடல் உணவுகளுக்கான தேவையை மேலும் அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை சார்ந்த பிரிவுகள் மற்றும் தூதரகம் ஊடாக ஒருங்கிணைத்து, விரைவாகச் செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது தீர்மானம் மேற்கொண்டனர்.
இலங்கையின் கடற்றொழில் துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்கி, உலகளாவிய தரத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் வழங்கும் இந்த ஆதரவு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பக்கபலமாக அமையும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Post a Comment