Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு மாணவர் அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் போது, அதற்குரிய முறையான தகைமைகளைக் கொண்டிராத போதிலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டமை மற்றும் கடற்படை நடைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களை மீறி, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் உயர் பயிற்சிப் பாடநெறியொன்றைப் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget