தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கைக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கியதற்காகவும், நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் ரோந்துப் படகுகள் மற்றும் விமானங்களுக்காகவும் அமைச்சர் அரசாங்கத்தின் நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர், இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை தாம் பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்டார்.

Post a Comment