பிரித்தானியப் பிரதமர் மற்றும் தொழிற்கட்சியின் தலைவர் பதவிகளிலிருந்து தான் விலகப் போவதாக கெய்ர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட்டில் உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர், அடுத்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியை வழிநடத்துவதற்கு தான் பொருத்தமானவர் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், பதவியிலிருந்து விலகும் தனது முடிவு குறித்து மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு முறைப்படி அறிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, தாங்கள் பொறுப்பேற்ற போது தொழிற் கட்சி அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருந்தது எனவும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
தமக்குத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கட்சி முடிந்துவிட்டது என்றே கூறப்பட்டதாகவும், ஆனால் அவர்களைத் தாம் தவறென நிரூபித்துக் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யூத எதிர்ப்பு என்ற நச்சுத்தன்மையை வேரோடு பிடுங்கி எறிந்ததன் மூலம் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை தாம் மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தாம் பதவி விலகும் தீர்மானத்தை மன்னருக்கு அறிவிப்பதற்காக, இன்று காலை அவரிடம் உரையாடியதாகக் குறிப்பிட்டார்.

Post a Comment