இந்த அதிரடி முற்றுகையின் போது முதன்மைச் சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
குடிநீர் விநியோக மையம் என்ற அந்த இருமாடி வீட்டிற்குள் நுழைந்து அதிகாரிகள் சோதனையிட்ட போது, அங்கு அதிநவீன மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், போத்தல்களுக்கு மூடி போடும் கருவிகள் மற்றும் போத்தல்களில் ஒட்டுவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்பட்ட பெருமளவிலான போலி லேபிள்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த ரகசிய ஆலைக்குள் இருந்து சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த, 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத மதுபானப் போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, இந்தச் சட்டவிரோத வியாபாரத்திற்குப் புகலிடம் கொடுத்த வீட்டின் உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment