Ads (728x90)

வாகனங்களில் ஆசனப்பட்டி அணிதலை கட்டாயமாக்கும் ”ஆசனப்பட்டி சட்டம்” இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டும். 

சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் இருக்கையில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.

வாகனங்களின் முன் இருக்கைகளில் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 

வாகனங்களில் ஆசனப் பட்டிகள் இல்லாதிருப்பின், அவற்றை பொருத்துவதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை சபை தெரிவித்துள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget