Ads (728x90)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது உயிரிழந்த 07 சிறைச்சாலை அதிகாரிகளினதும் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று முற்பகல் ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு எடுத்து வரப்பட்டன.

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில், வெலிக்கடை சிறைச்சாலையின் அவசர கால யுக்திகள் பிரிவை சேர்ந்த அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ஷ, மற்றும் பாதுகாவலர்களான எஸ்.டி.எஸ். அபேவன்ஷ, ஏ.டி. தரங்க, டி.எம்.ஆர். திலகசிரி, பி.என்.என். தரங்க, டி.டபிள்யூ. புஷ்பகுமார, ஆர்.பி.ஆர். சஞ்சீவ ஆகிய ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

நீண்ட காலம் தங்களோடு இணைந்து பணியாற்றிய சக அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, சக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். 

சிறைச்சாலையின் சீர்திருத்தப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் உடல்களுக்கு, சிறைச்சாலை உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். சுமார் நான்கு மணி நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அந்தத் தியாகிகளின் உடல்கள், இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்காக அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget