பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறைச்சாலை மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை காலத்தில் குட்டிமணி உள்ளிட்ட 35 கைதிகள் அரசியல் நோக்கத்திற்காக கொல்லப்பட்டனர். அதற்கு சில தினங்களின் பின்னர் மேலும் 18 பேர் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் அரசியல் தலையீட்டுடன், இராணுவம் மற்றும் பொலிஸாரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், நீர்கொழும்பு சம்பவம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளும், அவர்களது பிள்ளைகளும் சிக்கி வருகின்றனர். இவர்களைப் பாதுகாக்கவும், அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் இத்தகைய சதி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என விசாரணைகளில் தேட வேண்டியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment