2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசாங்கத்தில் இணைவது தொடர்பாக ரில்வின் சில்வாவினால் ஜேவிபி மத்திய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை, விமல் வீரவன்ச தனது “நெத்த வெனுவட்ட எத்த” (பொய்க்குப் பதிலாக உண்மை) என்ற புத்தகத்தில் அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி ரில்வின் சில்வா, விமல் வீரவன்சவுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
ரில்வின் சில்வாவால் எழுதப்பட்ட குறித்த ஆவணங்கள் 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமை சொத்துச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய அசல் படைப்புகள் எனவும், விமல் வீரவன்ச குறித்த ஆவணங்களை முழுமையாகத் தனது புத்தகத்தில் சேர்த்ததன் மூலம் ரில்வின் சில்வாவின் பொருளாதார மற்றும் தார்மீக உரிமைகளை மீறியுள்ளார் எனவும், இது அரசியலாய்வுக்காகவோ அல்லது பொது நலனுக்காகவோ செய்யப்பட்ட நியாயமான பயன்பாடு அல்ல என்றும், இலாப நோக்கத்திற்காக முழுமையான படைப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
விமல் வீரவன்ச இப்புத்தகத்தின் மூலம் சுமார் 13 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதை அவதானித்த நீதிமன்றம், ரில்வின் சில்வாவுக்கு 1 மில்லியனை ரூபாவை சட்டரீதியான இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான ஜனக் டி சில்வா, கலாநிதி சோபித ராஜகருணா மற்றும் எம் சம்பத் கேபி விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
.jpeg)
Post a Comment