Ads (728x90)

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65,034 ஆக பதிவாகியுள்ளது. 

ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மட்டும் 9,654 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

கம்பஹா மாவட்டத்தில் 13,332 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 13,150 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,600 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget