Ads (728x90)

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலிய மகளிர் அணி மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவி நாட் ஷிவர்-பிரண்ட் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், அலிஸ் கேப்சி 23 ஓட்டங்களையும், பிரேயா கெம்ப் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் கிம் கார்த், லூசி ஹாமில்டன், சோபி மோலினக்ஸ் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 17.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பில் பெத் மூனி 64 ஓட்டங்களையும், லிட்ச்பீல்ட் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் லோரன் பெல், சார்லி டீன் மற்றும் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதன்படி, 7ஆவது முறையாகவும் அவுஸ்திரேலிய மகளிர் அணி ரி20 உலகக் கிண்ணத்தை  வென்றுள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget