திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வரவுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின்படி, 30 ரூபாயாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகபட்ச பேருந்து கட்டணமான 2,422 ரூபாயானது 480 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 2,902 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
.jpeg)
Post a Comment