Ads (728x90)

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மெட்லைப் ஸ்ரேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் மோதின.

இரு அணிகளும் போட்டி தொடங்கியதில் இருந்தே  தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின்போது ஆர்ஜென்டீனா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை மூலம் வெளியேற்றப்பட்டார்.

இதனால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.

கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரஸ் 106வது நிமிடத்தில் அடித்த ஒரே கோலின் மூலம், ஆர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget