அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடந்து வருவதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கலுக்கு தீர்வாக, நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த ஈராக் - சிரியா வழியாக செல்லும் கச்சா எண்ணெய் குழாய்த்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான 'செவ்ரான்' (Chevron) மற்றும் சுவிட்சர்லாந்தின் 'டிரான்ஸ்ஓஷன்' (Transocean), கத்தாரைச் சேர்ந்த 'அர்பாகன்' (Urbacon) ஆகிய நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கடல் வழிப்பாதையை நம்பியிருக்காமல் நிலத்தின் வழியே குழாய்கள் அமைத்து எண்ணெயை கொண்டு செல்ல அமெரிக்க நிறுவனங்களும், ஈராக் அரசும் முடிவு செய்துள்ளன.
உலகிற்கு தேவையான கச்சா எண்ணெயில், 20 சதவீதம் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பாதையை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment