'ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ்' நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு முக்கியமாக இருக்கும் மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை தரப்படுத்தலில் இலங்கை 'CCC+' இல் இருந்து 2026 ஆம் ஆண்டில் 'B-'க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தித்வா புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், பொருளாதாரப் பாதையை மாற்றாமல் முன்னோக்கிச் சென்றமையாலேயே இந்த ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்தது என்பதைப் பிரத்யேகமாகக் குறிப்பிட வேண்டும்.
அதேபோல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு முக்கியமாக இருக்கும் மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை தரவரிசை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
ஒரு முதலீட்டாளர் தான் ஈட்டும் இலாபத்தை மீண்டும் தனது நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான வசதி மற்றும் அவர்கள் பெற்ற கடன்களையும், வட்டியையும் செலுத்துவதற்காக உள்ளூர் நாணயத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றிக்கொள்வதற்கான திறன் ஆகியவை இதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தான 'CCC' மட்டத்தில் இருந்த இந்தத் தரவரிசை, 2025 இல் 'CCC+' ஆகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது 'B-' ஆகவும் முன்னேற்றமடைந்துள்ளது.
.jpeg)
Post a Comment