அத்துடன், நாளொன்றுக்கு பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 950 க்கும் 1,000 க்கும் இடைப்பட்டதாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், அடுத்த மூன்று நாட்களிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 11,163 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 10,662 பேரும், மாத்தறையில் 3,921 பேரும், களுத்துறையில் 3,600 பேரும், இரத்தினபுரியில் 3,279 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல் சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு புதிய டெங்கு செயற்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது.
இதன் கீழ், டெங்கு பரவல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிப்பதற்கும், வழிகாட்டல்களைப் பெறுவதற்கும் 011-7966366 என்ற பிரத்யேக அவசர உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், நோய்க் கட்டுப்பாட்டுப் பணிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment