இதற்கு முன்னர் ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் சேவையை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியிருந்தது.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இன்று முதல் கடுகதி ரயில் சேவை வழமைபோல் இயங்கவுள்ளது.
இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Post a Comment