Ads (728x90)

பிரித்தானியாவின் 59வது பிரதமராக எண்டி பர்ன்ஹம் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார். 

கீர் ஸ்டார்மரிடமிருந்து தொழிற்கட்சியின் தலைமைப் பொறுப்பை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்ட பர்ன்ஹம், ஸ்டார்மர் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்று சார்லஸ் மன்னரிடம் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்ததை தொடர்ந்து, பிரதமராகப் பதவியேற்கும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டார். 

ஒரு மாதத்திற்கு முன்பே மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பிய கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான இவர், தற்போது டவுனிங் வீதிக்குச் செல்லவுள்ளதுடன், ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget