Ads (728x90)

இலங்கை நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக திருமதி நூர் றிசானா அனீஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

காலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், நீண்ட காலம் நிதி அமைச்சில் பல்வேறு உயர் பதவிகளில் கடமையாற்றியுள்ளார். இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த இவர், 31 வருடங்கள் அரச சேவையில் பணியாற்றிய பின்னர் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கே. கருணாகரன் மற்றும் திருமதி ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க ஆகியோரும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் வழங்கி வைத்தார். 

நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே புதிய இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget