ஜூன் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தத்தை கருத்திற் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, அதிவேக வீதிகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள பேருந்து கட்டணக் கொள்கையின்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி பேருந்து கட்டண திருத்தம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
.jpeg)
Post a Comment