Ads (728x90)

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை குறைக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

அமெரிக்க மண்ணில் பிறக்கும் ஏறக்குறைய அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் 14ஆவது சட்டத்திருத்தம் குறித்த நீண்டகால விளக்கத்தை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் இந்த உத்தரவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பித்திருந்தார். அதை உச்சநீதிமன்றம் இரத்து செய்துள்ளது. கீழவை நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 6-3 என்ற நீதிபதிகளின் தீர்ப்புகள் அடிப்படையில் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தை தன்னிச்சையாக அமெரிக்க குடியுரிமை பெறும் வகையில் சட்டம் உள்ளது. 

ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வந்திருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்று நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தது. 

மேலும், அதில் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியேறியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget