Ads (728x90)

தெரு விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும், அவற்றைக் காப்பாற்றுவதும் நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "PET EXPO 2026" கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கோயில்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் சிறிய நாய்க்குட்டிகளையும், பூனைகளையும் கைவிடுவது ஒரு மோசமான பழக்கமாக மாறியுள்ளது. பொதுமக்கள் இவ்வாறான செயல்களைத் தவிர்த்து, தெரு விலங்குகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

விலங்கு நலன் தொடர்பான தேசியக் கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விலங்குகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும்.

செல்லப்பிராணிகளுடன் இணைந்து வாழ்வது குழந்தைகளிடம் இரக்கம், கருணை மற்றும் பிறர் நலன் பேணும் பண்பை வளர்க்கிறது. இது அவர்களின் தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியமானது.

இலங்கை செல்லப்பிராணி கால்நடை மருத்துவச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சியில், தெரு விலங்குகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் "அலோகா" அரங்கு திறந்து வைக்கப்பட்டது. 



 

Post a Comment

Recent News

Recent Posts Widget