உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து சுகவீனம் காரணமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சாலி, தற்போது அங்குள்ள இருதய சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 72 மணிநேரத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
தனது வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்பார்வையிடும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்க வேண்டும் என்றும், தன்னை வேறொரு தடுப்பு நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, சுரேஷ் சாலி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
Post a Comment