விலங்குகளைத் தாக்குதல், தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்துதல், அவற்றை அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல், தகுதியற்ற விலங்குகளை வேலைக்கு அமர்த்துதல், வேண்டுமென்றே அவற்றுக்கு உணவு, தண்ணீர் அல்லது தங்குமிடத்தை மறுத்தல், மற்றும் வேறு எந்த வழியிலும் தேவையற்ற வலியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்களை இந்த சட்டம் தடை செய்கிறது.
இத்தகைய குற்றங்களில் தண்டிக்கப்படும் எவருக்கும் 2,50,000 ரூபா வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கொடுமையான முறையில் விலங்குகளின் உயிர்பறிப்பவர்களுக்கு தண்டனையாக 5,00,000 ரூபா வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்ட வரைவு பரிந்துரைக்கிறது.
மேலும், விலங்குகளைக் கைவிடுதல், நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகளைப் பொது இடங்களில் இறக்க விடுதல், சட்டவிரோத கருத்தடை நடைமுறைகள் மற்றும் தகுதியற்ற நபர்களால் மேற்கொள்ளப்படும் கால்நடை மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விதிகளை அறிமுகப்படுத்துகிறது.
விலங்குகளைக் கொண்டு செல்வது தொடர்பாகவும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவை தேவையற்ற வலி, துன்பம், காயம் அல்லது ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும். மீறல்களுக்கு 3 லட்சம் ரூபா வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கூடுதலாக, செல்லப்பிராணி வியாபார நிலையம் மற்றும் விலங்கு இனப்பெருக்க மையங்களுக்கு உரிமம் வழங்கும் முறையை இந்த சட்டம் முன்மொழிகிறது.
.jpeg)
Post a Comment