யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த வலயத்திற்குள் அமைந்துள்ள 1,661 ஏக்கர் காணியைச் சட்டத்தின் பிரகாரம் இராணுவத்திற்கு உரித்தாக்கி, காணி உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
774.98 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக மேலதிக காணிகள் தேவைப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இது குறித்த நடவடிக்கைகளை நில அளவைத் திணைக்களம், முப்படைகள் மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் பொதுக் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் 2024 வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் பதவியேற்றவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்ததுடன், எதிர்வரும் சில மாதங்களில் மேலும் 243 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
.jpeg)
Post a Comment