Ads (728x90)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிகவும் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அவர்களது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி, தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே இந்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேரின் பிரேத பரிசோதனைகள், ஐந்து பேர் கொண்ட விசேட நீதிமன்ற மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, 14 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களினாலும், மேலும் 9 மரணங்கள் கொடூரமான தாக்குதல்கள் காரணமாகவும் ஏற்பட்டுள்ளதாக மரண பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எஞ்சிய 4 சடலங்கள் மீதான மரண பரிசோதனைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நால்வரில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவத்தினால் சிறைச்சாலை வளாகத்திற்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அந்தச் சேத விபரங்கள் குறித்த இறுதி மதிப்பீட்டு அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget