கல்கிசைலிருந்து அதிகாலை 5.15 மணிக்கும், கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45 மணிக்கும் காங்கேசன்துறை நோக்கிப் புறப்படும் கடுகதித் தொடருந்து மற்றும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு கல்கிசை நோக்கித் திரும்பும் தொடருந்து ஆகியன இனி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் தேவி தொடருந்துச் சேவையும் தினசரி ஒரு பயணமாக மட்டுப்படுத்தப்படும் என்று ஜயசேகர தெரிவித்தார். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள், கொழும்பிலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் இரவு நேரத் தபால் தொடருந்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடருந்துச் சேவைகளின் தொடர்ச்சியான இரத்து மற்றும் குறைப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம், போதுமான தொடருந்துப் பெட்டிகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

Post a Comment