Ads (728x90)

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபா வரி வருவாயை வசூலித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் பாதிக்காக சுங்கத் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கு 1,060.5 பில்லியன் ரூபாவாகும். எனினும், திறமையான முகாமைத்துவம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 313 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டி திணைக்களம் சாதனை நிலைநாட்டியுள்ளது.

தற்போதைய வருமானப் போக்கின்படி, கடந்த ஆண்டு எட்டப்பட்ட 2.5 ட்ரில்லியன் ரூபா வரலாற்றுச் சாதனை வருமானத்தை இந்த ஆண்டில் முறியடிக்க முடியும் என சுங்க ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget