இதன்போது, எமது கோரிக்கைகளை உள்ளடக்கிய எழுத்துமூலமான கடிதமொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம்.
ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம்.
இந்திய மற்றும் ஈழத் தமிழ்க் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காணும் நடவடிக்கைகள்.
இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், செல்வராசா கஜேந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், கே. வி. தவராசா, தருமலிங்கம் சுரேஷ், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் நடராஜர் காண்டீபன் ஆகிய ஏழு பேர் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment