இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4,765 ரூபாயாக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,465 ரூபா ஆகும்.
அதேபோல், 1,910 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,792 ரூபாவாகும்.
890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 835 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 1,280 ரூபாவால் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 6,245 ரூபாவாக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,965 ரூபாய் ஆகும்.
அதேபோல், 2,500 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,988 ரூபாவாகும்.

.jpeg)
Post a Comment