பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது அஞ்சல் உறைகள் சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’போதைப்பொருள் அடங்கிய அஞ்சல், உறைகள் அதிகளவில் வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்துகின்றனர்.
தினமும் அதிகப்படியான சர்வதேச அஞ்சல்கள் நாட்டுக்குள் வருவ அனைத்து பொதிகளையும் ஆய்வு செய்ய முடியாது.
தனித்தனி அஞ்சல் உறைககளில் உள்ள போதைப்பொருட்களின் அளவு குறைவாகத் தோன்றினாலும், அவை இறுதிப் பயனாளியைச் சென்றடைந்து, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.

Post a Comment