இந்து மற்றும் பௌத்த சமயங்களில், கர்மா என்பது ஒருவரின் முந்தைய மற்றும் தற்போதைய செயல்களின் கூட்டுத்தொகையாகும். ஒருவர் செய்யும் நல்ல செயல்கள் நல்ல பலன்களையும், தீய செயல்கள் தீய பலன்களையும் தருகின்றன.
நாம் செய்த தானம், பிறருக்கு கொடுத்த மரியாதை, அடுத்தவருக்கு செய்த துரோகம், இது மூன்றும் கண்டிப்பாக ஒரு நாள் நம்மை தேடி வந்து நாம் என்ன செய்தோமோ அதை விட சிறப்பாக நமக்கு செய்துவிட்டு போகும்.
கர்மங்கள் இருக்கும் வரை செய்து தான் ஆக வேண்டும். கர்மங்களை செய்து தான் தீர்க்க வேண்டுமே தவிர அதை கண்டு ஓடினால் பாவமே சேரும். கர்மங்கள் அணைத்து முடிக்கப்பட்ட உடன், அந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்காத இறை நிலையை அடைய முடியும்.

Post a Comment