Ads (728x90)

ஐக்கிய அமெரிக்காவின் மியாமி மைதானத்தில் இன்று அதிகாலை நடந்த 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்தது. 

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சாவும், புகாயோ 37 மற்றும் 46ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து முதல் பாதியிலேயே இங்கிலாந்தை 4-0 என அசைக்க முடியாத பலத்திற்கு கொண்டு சென்றார். 

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக விளையாடி, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 48 மற்றும் 66 ஆகிய நிமிடங்களில் இரண்டு கோல்களையும், 54-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும் கோல் அடித்து இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இருப்பினும், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய புகாயோ சாகா, தனது 3-வது கோலை பதிவு செய்து ஹெட்ரிக் சாதனையுடன் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget