நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 6 குடும்பங்கள் அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த குடியிருப்புகளிலிருந்த மக்கள் வெளியேற்றமானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை எனவும் தெளிவுபடுத்தினார்.இந்தச் சம்பவம் தொடர்பில் எல்.ஆர்.சி நிறுவனத்துடன் கலந்துரையாடி உண்மையான பின்னணி குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment