Ads (728x90)

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மத நல்லிணக்கத்தின் திருத்தலமாக விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’பக்தி கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெரும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இந்த ஆண்டுக்கான ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது.

இவ்விழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால்நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்கான காட்டுவழிப் பாதையும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget