சுரேஷ் சலேயின் மனுவில் தம்மையும் இணைத்துக்கொண்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்குமாறும், அந்த மனுவை நிராகரிக்குமாறும் பேராயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு எந்தவிதத் தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த குறுக்கீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வில், எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Post a Comment