நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்பு (HRES) திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு ஆராயப்பட்டது.
இத்தீவுகளை மேலும் பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துவதற்கும் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது செயல்பாட்டில் உள்ள நிலத்தடி மின்சார விநியோகப் பாதைகள், மின்சார விநியோக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கூரைகளில் பொருத்தப்படும் சூரிய சக்தி ஒன்று திரட்டும் திட்டங்கள் உள்ளிட்ட, எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கும் முக்கிய வேலைத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும், எரிபொருள் துறையில் தற்போது செயல்படுத்தப்படுகின்ற முக்கிய திட்டங்களான கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய வளாகங்களில் எரிபொருள் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட 14 முக்கிய வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை ஆராய்ந்ததுடன், இந்த திட்டங்கள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களுக்கு அதன் பலன்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இங்கு வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


Post a Comment