Ads (728x90)

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்கிறது.

ரஷ்யாவின் ஆற்றல் வளங்களை அதிகம் வாங்கும் முதன்மை 5 நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம் அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படவுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்குச் செல்லும் பணப்புழக்கத்தைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget