கடந்த காலங்களில் இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மத்தியஸ்த நிலையமாக விளங்கியது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளைத் தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்.
சிறைச்சாலை அமைதியின்மைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின் அமைதியைக் குலைக்க முயலும் நபர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
.jpeg)
Post a Comment