Ads (728x90)

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமும் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அதிகரிக்கவும், ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீதித்துறை அமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை, நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது தற்போது 61 வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனைய நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வு வயது தொடர்பான ஏற்பாடுகள் விதிமுறைகளின் கீழ் தீர்மானிக்கப்படுகின்றன.

நீதித்துறையில் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளை தொடர்ந்து பணியில் வைத்திருப்பதற்கும், நீதிமன்றங்களில் நிலவும் வழக்கு தேக்கத்தை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget