இத்திட்டத்தின் கீழ், ஹோமாகம 132/33 kV துணைமின் நிலையத்தை அமைப்பதற்கான பணிகளின் ஆரம்ப நிகழ்வு, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகைக் கடன் நிதியின் கீழ் 328.25 மில்லியன் டொலர் பாரிய முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டம், இலங்கை மின்சார தனியார் நிறுவனமான LECO, இலங்கை மின்சார சபையின் வாரிசு நிறுவனங்களான முழுமையாக அரசுக்குச் சொந்தமான National Transmission Network Services Provider (NTNSP) மற்றும் National System Operator (NSO) ஆகிய இரு நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஹோமாகம, கொட்டாவ, மாலபே மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி காரணமாக தொழில்துறை மற்றும் வர்த்தக மின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதால், அந்த மின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய ஹோமாகமவில் இம்மின் நிலையம்அமைக்கப்படுகின்றது.
தற்போது இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பன்னிப்பிட்டிய மற்றும் கொஸ்கம மின்கம்பி துணைநிலையங்களில் நிலவும் அதிகப்படியான சுமையை குறைக்கவும் இது உதவும்.

Post a Comment