இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன வினிவித அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் இறையாண்மை மற்றும் நீதிமன்றத்தின் சுதந்திரம் என்பன பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அதனை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படின் குறித்த சட்ட மூலம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்குமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-லிருந்து 67-ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 63-லிருந்து 65-ஆகவும் உயர்த்துவதற்கு இந்த சட்டமூலம் வகை செய்கிறது.
வழக்குகள் மீதான தாமதம் மற்றும் தேக்கநிலை ஆகியவற்றைச் சரிசெய்வது உட்பட, நீதித்துறையை வலுப்படுத்துவதையும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதையுமே முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment