Ads (728x90)

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல்வாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் கீழ் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தின் போது, இவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை விமர்சித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக வழக்கை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget