Ads (728x90)

மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், நேற்று வியாழக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நடைபெற வேண்டிய அனைத்து தேர்தல்களும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என நேற்றுமுன்தினம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget