பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட ரூபா 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில், உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச நிதி வெளிப்படைத்தன்மை தொடர்பில் இப்போது கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில், வெளிப்படையாக செயற்படத் தவறியுள்ளனர். அர்ஜுன மகேந்திரன் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார். எப்போதும் அவர் இலங்கைக்கு வருவாரென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதே பாராளுமன்றத்தில் கூறியமை, நன்கு நினைவிலுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு இன்னும் சிங்கப்பூரில் திருமண நிகழ்வு முடியவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியால் நாட்டுக்கு பல பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டது. அன்று எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு நாம் இதனை வெளிப்படுத்தினோம். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு வெகுவிரைவில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

Post a Comment