இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், அத்தகைய பயங்கரவாத முகாம் எதுவும் அப்பகுதியில் இல்லை என தெரிவித்துள்ளார்.
குறித்த வனப்பகுதியின் ஒரு பகுதியை நபரொருவர் சட்டவிரோதமான முறையில் துப்புரவு செய்து, அதில் மூன்று மாடி கட்டிடமொன்றைக் கட்டி அப்பகுதி மக்களின் பங்கேற்புடன் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடத்திச் சென்றுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த வனப்பகுதியின் ஒரு பகுதியைச் சட்டவிரோதமாகத் துப்புரவு செய்தமை தொடர்பாகக் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், அதன்படி அவருக்கு எதிராக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment