நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.jpeg)
Post a Comment