Ads (728x90)

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாகவும், உரிய முறையிலும் அமுல்படுத்தப்பட்டு வருவதால் எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த வகையில் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குற்றச்சாட்டுகளின் தன்மைக்கு ஏற்ப சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், உத்தரவின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, பல்வேறு வழக்குகளில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசியல் ரீதியாக பலர் குழப்பமடைந்துள்ளனர். 

சட்ட அமுலாக்க நடவடிக்கைகளின் வேகத்தை குறைப்பதற்கும், விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்வதற்கும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. சாகர காரியவசத்தின் வாயிலாக பொலிஸ்மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து சாதாரணமாக வெளிவந்திருக்க முடியாது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வைராக்கியம் எந்தளவுக்கு சென்றுள்ளது என்பதை அவரது கருத்து காட்டுகிறது என தெரிவித்துள்ளார். 

 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget